மின்சார விமானத் துறையில் புதிய மைல்கல் – சீனாவில் மனிதர்களால் இயக்கப்படும் மின்சார விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

மின்சார விமானத் துறையில் புதிய மைல்கல் – சீனாவில் மனிதர்களால் இயக்கப்படும் மின்சார விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்ப மைல்கல்லாக, சீனாவில் மனிதர்களால் இயக்கப்படும் மின்சார விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

 

இந்தச் சோதனை ஓட்டத்தின்போது, அந்த மின்சார விமானம் தொடர்ந்து 16 நிமிடங்கள் வானில் பறந்து, 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது.

 

மணிக்கு அதிகபட்சமாக 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த விமானம், ஒருமுறை மின்னேற்றம் செய்தால் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

நகரங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில், ஒரே நேரத்தில் 19 பயணிகள் பயணம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் எதிர்காலப் போக்குவரத்து முறைகளில் மின்சார விமானங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்தச் சோதனை வெற்றி, விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook