மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்!

மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

 

இந்தக் கண்காட்சியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்ப மாதிரிகளைப் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

 

மாணவர்களின் அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

 

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் லதா, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா, மாவட்டக் கல்வி அலுவலர் சிவராமன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook