சென்னையில், மகாவீர் இன்டர்நேஷனல் அபெக்ஸ் அமைப்பின் 52-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு, மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் சார்பில் வெயிலில் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் குடை வழங்கும் நிகழ்ச்சி 22.07.2026 அன்று பல்லிக்கரணையில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, ஜூட் பைகளை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வரும் முத்துசெல்வி என்ற பெண்ணுக்கு முதல் குடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதில் தலைவர் மகேந்திர்–குணவந்தி பகாரியா, துணைத் தலைவர் பிரவீண்–நீதா கும்பட், செயலாளர் நரேந்திர் கான்டெட், பொருளாளர் வசந்த் பராடியா ஆகியோர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
குடையை பெற்றுக் கொண்ட முத்துசெல்வி, “இனி வெயிலும் மழையும் என்னை அதிகம் பாதிக்காது. இந்த உதவிக்கு மனமார்ந்த நன்றி,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

