சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தினந்தோறும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள் வீடு தோறும் சென்று புகை மூட்டுதல், கொசு வளரக்கூடிய இடங்களில் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
கொசு மூலம் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களும் தங்கள் வீடுகள் மற்றும்
சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

