இனி வீட்டிலிருந்தே இணையவழியில் புகார் பதிவு செய்து e-CSR ரசீது பெறலாம் – தமிழக காவல்துறையின் புதிய அதிரடி முயற்சி இன்று அறிமுகம்!

இனி வீட்டிலிருந்தே இணையவழியில் புகார் பதிவு செய்து e-CSR ரசீது பெறலாம் – தமிழக காவல்துறையின் புதிய அதிரடி முயற்சி இன்று அறிமுகம்!

தமிழக மக்களின் காவல்துறை சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

இதுவரை பல்வேறு புகார்களை அளிப்பதற்காக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் மனுக்களை அளித்து, அதன் பின்னர் புகார் பதிவு செய்யப்பட்டதற்கான ரசீதுகளைப் பெற வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த நடைமுறையை எளிமைப்படுத்தி, பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே இணையதளம் மூலம் புகார்களைப் பதிவு செய்யும் வசதியை தமிழக காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தப் புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் இணையவழியில் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான e-CSR ரசீதையும் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் புதிய இணையவழிச் சேவையை இன்று (நவம்பர் 18) தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைக்கிறார்.

 

தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி காவல்துறை சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் இந்த முயற்சி, பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், காவல்துறையை அணுகுவதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மக்களுக்கான காவல்துறை சேவை இனி இணையவழியில்!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook