சிறையிலிருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி – பாழடைந்த கிணற்றில் பதுங்கியுள்ளதை போலீசார் பிடிப்பு
கண்ணூர், ஜூலை 25: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறையிலிருந்து கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதி சிறையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடல் நடவடிக்கையின் போது, அருகிலிருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் கோவிந்தசாமி மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், அவரை


