முன்கூட்டியே கண்டறிவோம்… முழுமையான வாழ்வை நோக்கிப் பயணிப்போம்! — பெண்களுக்கான இலவச மார்பகப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சேவைகள் வழங்கல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், ‘பிங்க் அக்டோபர்’ மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, “மம்மோ வாக் 2026” என்ற மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. “முன்கூட்டியே கண்டறிவோம்… முழுமையான வாழ்வை நோக்கிப் பயணிப்போம்!” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தையும், பெண்கள்


