சென்னை, ஆக. 8–
நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்று உள்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

