காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகள் கைது செய்யப்படாதது சோகம்

காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகள் கைது செய்யப்படாதது சோகம் – டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிக்கை காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே உள்ள பாலாஜி நகர அரசு ஓட்டுநர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இக்குற்றம் நடந்தே நான்கு நாட்கள் கடந்தும்,

Read More

சாதிய ஆணவக்கொலையில் கொலை – சமூகத்தில் அதிர்ச்சி

திருநெல்வேலி, ஜூலை 28: திருநெல்வேலியில் நிகழ்ந்த ஒரு சாதிய ஆணவக்கொலைச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கெவின் (Kavin), கடந்த வாரம் அதிக்க சாதியினராகக் கூறப்படும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த தனது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். கெவின், பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் மட்டுமின்றி, முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். அவர் மாதத்திற்கு சுமார் ரூ. 2 லட்சம்

Read More

அட்டகாசம் செய்த ஜோடிகள் – தலா ரூ.3,000 அபராதம்

பைக்கில் பெட்ரோல் டேங்கில் பெண்ணை அமர வைத்து அட்டகாசம் செய்த ஜோடிகள் – தலா ரூ.3,000 அபராதம் திருத்தணி: நெடுஞ்சாலையில் பாதுகாப்பு விதிகளை மீறி பயணித்த ஜோடிகள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. திருத்தணியை அண்மித்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு பைக்கில், பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை அமர வைத்து, ஆண்கள் சாலையில் வேகமாக செல்கின்றது போன்ற

Read More

ராஜு பிஸ்வகர்மா கைது திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை:

திருவள்ளூர், ஜூலை 26: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜு பிஸ்வகர்மா (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அசாம் மாநிலம் தின்சுகியாவைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதுடன், குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வடக்கு மண்டல காவல்

Read More

காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்

எழும்பூரில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்   சென்னை, ஜூலை 26: சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத போதைப் பொருள் கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது, காவல்துறையினரிடையே மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மக்கள் முன்னணி

Read More

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்: 14 நாட்களுக்குப் பிறகு உண்மை குற்றவாளி கைது

திருவள்ளூர், ஜூலை 25: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவத்தில், 14 நாட்களுக்குப் பிறகு உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை எழுப்பியது. தொடக்கத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்கள் பிடிபட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும், சிறுமியின் வாக்குமூலத்திலும் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. சிறுமி நேரடியாக உண்மை

Read More

சிறையிலிருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி – பாழடைந்த கிணற்றில் பதுங்கியுள்ளதை போலீசார் பிடிப்பு

கண்ணூர், ஜூலை 25: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறையிலிருந்து கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதி சிறையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடல் நடவடிக்கையின் போது, அருகிலிருந்த ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் கோவிந்தசாமி மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், அவரை

Read More

பஞ்சாப் ஹோஷியார்பூரில் காவல் ஆய்வாளர் போதைப்பொருள் உட்கொளும் வீடியோ வைரல் – விசாரணை தீவிரம்

ஹோஷியார்பூர், ஜூலை 25: பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூரில் பணியில் இருந்த போது ஒரு காவல் ஆய்வாளர் போதைப்பொருள் உட்கொள்ளும் காட்சிகள் பதிவாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குறித்த காணொளியில், வேடிக்கை பார்வையாளர்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளர் ஒருவர் அந்நியத்தனமாக போதைப்பொருள் பயன்படுத்தும் படம் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் நடத்தை குறித்து

Read More

ராஜஸ்தான் அரசு பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி – 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

ஜாலாவர், ஜூலை 25: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவர் மாவட்டம், மனோகர் தானா பகுதியிலுள்ள பிப்லோடி அரசு பள்ளியில் இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட துயரமான சம்பவம் ஒரே நேரத்தில் பலரது உயிரையும் வாழ்வையும் பாதித்துள்ளது. பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் நேரத்தில் வகுப்பறைகளில் மாணவர்கள் இருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை

Read More

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலைய பெண்கள் கழிப்பறையில் மது பாட்டல்கள் கண்டெடுப்பு!

நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் பெண்கள் கழிப்பறையில், கடந்த சில தினங்களாக மது பாட்டல்கள், கப்கள் பெருமளவில் காணப்படுவதால் பொதுமக்களில் அதிர்ச்சி மற்றும் கண்டனம் கிளம்பியுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் – குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்ட பலர் பயன்படுத்தும் இந்த கழிப்பறையில், இத்தகைய செயற்பாடுகள் நடைபெறுவது சமூக ஒழுக்கத்திற்கே பெரும் சவால் எனக் கூறப்படுகிறது. சிலர், திருநங்கைகளுக்கு தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் கழிப்பறையில் வந்து மது அருந்துவதாகக்

Read More

Facebook