கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை! தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருப்பூர், நெல்லை, தாராபுரம் என பல்வேறு இடங்களில் நடந்த இந்த படுகொலைகள் சட்டம்-சமாதான நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன. 🔹 காதல் தகராறு – மாணவர் கொலை சென்னை கே.கே.நகர் பகுதியில் மாணவர் ஒருவர் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்டார். திமுக
Category: குற்றம்
ஆணவக் கொலைக்கு எதிராக பா.ரஞ்சித் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த ஆணவக் கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ஆழ்ந்த கவலைவை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி ஆணவச் சம்பவங்களும், வன்கொடுமைகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, இம்மாவட்டங்களை வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் ‘அடிக்கடி வன்கொடுமை நடைபெறும் பகுதிகள்’ (Atrocity Prone Areas)
லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு
125 சவரன் நகையுடன் காதலன் மாயம் – லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு அண்ணா நகரைச் சேர்ந்த பெண்ணின் பரபரப்பு புகார் : “15 வருட ரிலேஷன்ஷிப், திருமண வாக்குறுதி பொய் – ஏழு நாட்களாக காவல் நிலையத்தில் அலையும் அவலம்” அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண், பம்மலில் வசிக்கும் தனது ஆண் நண்பன் 125 சவரன் நகையுடன் மாயமானதாகவும், அந்த புகாரை பதிவு
ரூ.15 கோடி மதிப்பிலான அம்பெர்கிரிஸ் பறிமுதல்
புதுச்சேரியில் ரூ.15 கோடி மதிப்பிலான அம்பெர்கிரிஸ் பறிமுதல் புதுச்சேரி: கடல்சார் உயிரினங்களில் இருந்து உருவாகும் அரிய பொருளான அம்பெர்கிரிஸ் (திமிங்கல எச்சம்) கடத்தல் முயற்சியை புதுச்சேரி போலீசார் முறியடித்தனர். போலீசார் தெரிவித்ததாவது: ரகசிய தகவலின் பேரில் நடத்திய சோதனையில், சுமார் 7 கிலோ எடையுள்ள அம்பெர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடர்பில், அம்பெர்கிரிஸை விற்க முயன்ற மாயகிருஷ்ணன் என்பவர்
கச்சத்தீவு அருகே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
கச்சத்தீவு அருகே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது இராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை, ராமேஸ்வரம் பாம்பன் கடற்கரையிலிருந்து புறப்பட்டு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல்
3வது நாளாக கவின் உடலை வாங்க மறுப்பு –
நெல்லை ஆணவக் கொலை அதிர்ச்சி: 3வது நாளாக கவின் உடலை வாங்க மறுப்பு – சுர்ஜித் பெற்றோரையும் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம் நெல்லை மாவட்டத்தில் ஆணவக் கொலையில் உயிரிழந்த கவின் உடலை, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மூன்றாவது நாளாகவும் வாங்க மறுத்து வருகின்றனர். உடல் ஏற்க மறுப்பு கவினின் உடல் தற்போது நெல்லை அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கின் முக்கிய
வழக்கறிஞர் முருகானந்த் வெட்டிக்கொலை – பரபரப்பு
திருப்பூரில் வழக்கறிஞர் முருகானந்த் வெட்டிக்கொலை – பரபரப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த முருகானந்த் (35), தனது சொந்த ஊரான தாராபுரம் அருகே வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் அவரை ரோம்பவிதமாக தாக்கியுள்ளனர். இதில் கடுமையாக காயமடைந்த முருகானந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்குப்பின் குற்றவாளிகள் தப்பிச் சென்ற நிலையில், போலீசார்
நிமிஷா பிரியாவுக்கு விடுதலை – மரண தண்டனை நிரந்தரமாக ரத்து
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விடுதலை – மரண தண்டனை நிரந்தரமாக ரத்து ஏமனில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு ஏமனில் ஒரு தொழிலதிபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியா, 2020-ஆம் ஆண்டு அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு, மனித
உதவி காவல் ஆய்வாளர் மீது சிறுவன் தாக்குதல் – துப்பாக்கி சூட்டில் காயம்
திருநெல்வேலி பாப்பாக்குடியில் பரபரப்பு மோதலை சமரசம் செய்ய சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது சிறுவன் தாக்குதல் – துப்பாக்கி சூட்டில் காயம் திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுப்பதற்காக சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது 17 வயது சிறுவன் அரிவாளால் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் அதிகாரியின் மீது அரிவாளால் வெட்ட முயன்ற அந்த சிறுவனை, தற்காப்பு நடவடிக்கையாக

