சென்னை உயர் நீதிமன்றம் பார் கவுன்சிலிங் அருகாமையில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதேபோன்று, கடந்த மாதம் தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் அருகாமையிலும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருந்தது. தொடர்ந்து இவ்வாறு பொது இடங்களில், அதுவும் காவல்துறை மற்றும் நீதித்துறை வளாகங்களின் அருகே கூட பாதுகாப்பு இல்லை என்பதைக்
Author: vnewstamil
ஆபத்தை உணராத கல்லூரி மாணவிகள்: பஸ்சில் தொங்கியபடி பயணம் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணி நோக்கி புறப்படும் அரசு பேருந்துகளில், கல்லூரி மாணவிகள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு போதுமான பேருந்துகள் இல்லாததும், பேருந்து நெரிசலும் காரணமாக சிலர் இப்படிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும், மாணவிகள் கூட படியில் தொங்குவது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறி உள்ளது. இந்த ஆபத்தான பழக்கம் தினசரி காட்சியாக மாறியுள்ள நிலையில்,
கலங்கிய குடிநீர் — பெண்கள் ஆவேச முற்றுகை!
பானாவரத்தில் கலங்கிய குடிநீர் — பெண்கள் ஆவேச முற்றுகை! ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம்: பானாவரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கலங்கலாகவும் சகதியுடனும் வழங்கப்பட்டு வந்ததால், மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. யாதவா தெரு, பஜார் தெரு, கம்மார் தெரு, கோகுல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது மக்களின் கோபத்தை தூண்டியது. இதனால்
தப்பி ஓடிய நபருக்கு எலும்பு முறிவு. காவல்துறை விளக்கம்.
செங்கல்பட்டு: நந்திவரம் கூடுவாஞ்சேரியில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மின்வாரிய ஊழியரை அருவாளால் வெட்டிய ஏழு பேர் கொண்ட ரவுடிக் கும்பலை போலீசார் பத்து மணி நேரத்திலேயே பிடித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அம்பேத்கார் நகரில் பைக் ரேஸ் நடந்ததை மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் தட்டி கேட்டிருந்தார். இதனை பழிவாங்கும் நோக்கில் குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில், போலீசார் ஏழு பேரையும் கைது
சனாதனத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு – தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞர் இடைநீக்கம்
சனாதனத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு – தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞர் இடைநீக்கம் தில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சனாதனத்தை அவமதித்தார் என குற்றம்சாட்டி, அவரை செருப்பால் தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கு முரணான நடத்தை மற்றும் வழக்கறிஞர்களுக்கான நெறிமுறைகளை மீறியதற்காக எடுக்கப்பட்டதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காஜூராகோ கோவிலில் விஷ்ணு சிலையின்
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுகளை பெற்ற ஆட்சியர்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுகளை பெற்ற ஆட்சியர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயு.சந்திரகலா அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்
சிறைகளில் “செல்போன் கலாச்சாரம்” — பாதுகாப்புக்கு சவால்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதி ஒருவர் ஆப்பிள் மாலை அணிந்தபடி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. சீனிவாஸ் எனப்படும் “குப்பாச்சி சீனா” என்ற கைதி சிறையில் மொபைல் போனில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை பதிவு செய்து வெளியிட்டிருப்பது, சிறை பாதுகாப்பு முறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. சிறைகளில் மொபைல் போன்கள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கைதிகள் இதை எளிதில் பயன்படுத்துவது எவ்வாறு
பேட்டரி தீர்ந்ததால் திருட்டை பாதியில் கைவிட்ட திருடன்!
சென்னையை அடுத்த திருநின்றவூரில் நள்ளிரவில் நடைபெற்ற சுவாரஸ்யமான திருட்டு முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு உள்ள மகாலட்சுமி ஜுவல்லரி என்ற நகைக்கடையின் ஷட்டரை, அடையாளம் தெரியாத திருடன் ஒருவர் கட்டிங் இயந்திரம் கொண்டு அறுத்துள்ளார். ஒரு மனிதன் நுழையக்கூடிய அளவுக்கு ஷட்டர் வெட்டப்பட்ட நிலையில், அதன் பின்னால் இருந்த கிரில் கேட்யையும் அறுத்து உள்ளே நுழைய முயன்றுள்ளார். அதன் பின்னர் உள்ள கேஷ் கவுண்டர் மற்றும் நகை டிஸ்ப்ளே தடுப்பையும்
தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த மாணவ மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பரிசளிப்பு விழா!!
ஏஞ்சல் அபாகஸ் அகாடமி பயின்று வரும் மாணவர்கள் மாணவிகள் தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த அவர்களுக்கு பரிசளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பிரவீன்குமார்,அரசு தொடர்பு பிரிவுமாவட்ட அமைப்பாளர் டாக்டர் விகே. சஞ்சய்லோகேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ரவீந்திரநாத்சிங் மற்றும் மு.நகர தலைவர் காந்தி நகர மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மெடல் அணிவித்து
பதிவு தபால் சேவை நினைவுகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் பதிவு தபால் சேவை நிறைவு குறித்து பேசுகையில்,தபால் தலை சேகரிப்பு என்பது அஞ்சல் தலைகளையும்,

