திருவொற்றியூர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ். சௌமியா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் எஸ். ரங்கநாதன், அவந்திகா மற்றும் பள்ளி முதல்வர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

