சென்னை:
காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ரூ.2 கோடி கடன் பெற்றதற்காக சரத்குமார் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியதாகக் கூறி ஸ்ரீகிருஷ்ணா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சரத்குமார் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராகி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என சம்மன் பிறப்பித்துள்ளது.

