நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் இயக்கம் அதிகரிப்பு! சென்னையில் போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?

நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் இயக்கம் அதிகரிப்பு! சென்னையில் போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?

சென்னை நகரில் நம்பர் பிளேட் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உதாரணமாக, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நம்பர் பிளேட் பொருத்தப்படாத நிலையில் இருசக்கர வாகனம் ஒன்று இயக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

வாகனங்களுக்கு கட்டாயமாக பதிவு எண் வழங்கப்பட்டு, அந்த பதிவு எண் தெளிவாகக் காட்சியளிக்கும் வகையில் நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், அதை மீறி நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

நம்பர் பிளேட் இல்லாத வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றால், அந்த வாகனத்தை அடையாளம் காண்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்படக்கூடும். அதேபோல், குற்றச்சம்பவங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களை பின்னர் அடையாளம் காண்பதிலும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றின் கண்காணிப்பு இருந்தும் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் சாலைகளில் எவ்வாறு தடையின்றி செல்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

“அதிகாரிகள் தூங்குகிறார்களா?”

போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுபோன்ற விதிமீறல்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவது தொடர்ந்தால் கண்காணிப்பு நடவடிக்கையின் செயல்திறன் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் நிலை உருவாகும்.

எனவே, சென்னை மாநகரம் முழுவதும் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வாகனச் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் முன்பே நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது சம்பவம் நடந்த பிறகே அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா? என்பதே தற்போது பொதுமக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook