திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி பள்ளி விடுதியில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் பள்ளி நிர்வாகம் மாணவியை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சிறுமியின் தனியுரிமையை கருத்தில் கொண்டு, அவரின் அடையாளம் தொடர்பான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை..

