முதல் இந்தியர்! பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!

முதல் இந்தியர்! பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் இளம் செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீரர் ஃபேபியானோ கருவானாவிடம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த பிரக்ஞானந்தா, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி கம்பேக் கொடுத்தார்.

இறுதியில் 15–13 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.1.91 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இந்திய செஸ் வரலாற்றில் மேலும் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதியுள்ளார் பிரக்ஞானந்தா!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook