ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

சென்னை திருவொற்றியூர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், எண்ணூர் உதவி ஆணையாளர் வெங்கட் ரமணன் உத்தரவின்பேரில், M8 சாத்தாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது அலி ஜின்னா மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் உதவி ஆய்வாளர்கள் வேலாயா பாண்டியன், பாலாஜி மற்றும் எண்ணூர் உதவி ஆணையாளர் அவர்களின் தனிப்படையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையில் தலைமை காவலர்கள் ராஜேஷ்குமார், ரஞ்சித்குமார், கேசவன் மற்றும் முதுநிலை காவலர் அன்பு உள்ளிட்ட தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook