நீலாம்பூர் கதிர் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு.

நீலாம்பூர் கதிர் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு.

கோவை, ஆக.1– நீலாம்பூரில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (EDC) சார்பில், “The Reaction Catalyst: பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களின் மனதில் தொழில்முனைவோர் ஆர்வத்தைத் தூண்டுதல்” என்ற தலைப்பில் சிறப்பு வல்லுநர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொறியியல் மற்றும் மேலாண்மை மாணவர்களிடம் தொழில்முனைவு சிந்தனையை வளர்த்து, கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “இட்லி இனியவன்” நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மு. இனியவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.

தொழில்முனைவோர் பயணத்தில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்த அவர், இலக்கு நிர்ணயம், விடாமுயற்சி, நெருக்கடி மேலாண்மை மற்றும் தன்னூக்கம் ஆகிய நான்கு அம்சங்களே வெற்றியின் அடித்தளங்கள் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சிக்கு கதிர் நிறுவனங்களின் தலைவர் இ.எஸ். கதிர், துணைத் தலைவர் கே.எஸ். மிதிலேஷ், செயலாளர் லாவண்யா கதிர், இணைச் செயலாளர் டாக்டர் விது பிரதிக்க்ஷா ஆகியோர் தலைமை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற கேள்வி–பதில் அமர்வில் மாணவர்கள் தொழில்முனைவு, தொடக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்கள்), சவால்களை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து டாக்டர் மு. இனியவனிடம் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளையும் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். உதயகுமார், மேலாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் சி. குணசேகரன், டாக்டர் ந. பகுத்தறிவு மற்றும் திருமதி கிரிவாசுகி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook