சென்னை, ஜூலை 26:
மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் சார்பில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் அமைப்பின் ஒத்துழைப்புடனும், போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் பங்களிப்புடனும், பள்ளிக்கரணை மதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 7-வது இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமில் 106 பேருக்கு கண் பரிசோதனை, 49 பேருக்கு இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 52 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
பரிசோதனையில் 11 பேருக்கு கண்புரை (கேட்ராக்ட்) அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும், 2 பேருக்கு கண் நரம்பு பலவீனம் தொடர்பான மேல்சிகிச்சை அவசியம் எனவும் மருத்துவர்கள் கண்டறிந்து, அவர்களை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தேவையுள்ள நோயாளிகளுக்கு கழுத்துப் பட்டை, இடுப்புப் பட்டை, முழங்கால் பாதுகாப்பு, குதிகால் காலுறை, மணிக்கட்டு பட்டை, வலி நிவாரண தைலம், ஸ்ப்ரே, ஜெல் உள்ளிட்ட மருத்துவ உதவி பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டன. மேலும், செயற்கைக் கை பொருத்துவதற்காக சிலர் கிண்டியில் உள்ள முக்தி அறக்கட்டளைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் தலைவர் மகேந்திர்–குணவந்தி பகாரியா, துணைத் தலைவர் பிரவீன்–நீதா கும்பட், செயலாளர் நரேந்திர கான்டேட், பொருளாளர் பசந்த் பராடியா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.

