சென்னை: ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை சார்பில், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பவானர் பள்ளியில் (LKG முதல் 5-ம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 2 செட் புதிய பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அறக்கட்டளையின் தலைவர் கம்பீர்ஜி சோர்டியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர் மனீஷ் குமார் சவுத்ரி, செயலாளர் சுரேந்திர கோத்தாரி, NSU தலைவர் தர்ஷன் கோத்தாரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சீருடைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவர்கள், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும், மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை–கோல்டு அமைப்பு சார்பில் தலைவர் மகேந்திர குணவந்தி பகாரியா, பொருளாளர் பசந்த் பரடியா, உம்மேத் பாப்னா, நாராயண்லால் சீர்வி உள்ளிட்டோர் முன்னிலையில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. கல்வித் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினரும் பங்கேற்றனர்.

