ரூ.11.82 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி கைது!

ரூ.11.82 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி கைது!

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.11.82 கோடி மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரளத்தைச் சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது டிராலி பேக்கை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, பேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11.82 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஹர்ஷா சன்னியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கடத்தலுக்குப் பின்னால் செயல்பட்ட கும்பல் மற்றும் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பு குறித்து சுங்கத்துறை மற்றும் விசாரணை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook