சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சுரேஷ் என்பவரை, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்ட பிறகு பதிவான முதல் வழக்கு என்பதால் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

