சென்னை, ஜூன் 6–
கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோவையைச் சேர்ந்த தலைமை காவலர் சேக் அப்துல்லா மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சேக் அப்துல்லாவை பணியிடைநீக்கம் செய்தனர்.
இதனிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க சேக் அப்துல்லா முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

