புழல் சிறையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: பாதுகாப்பு குறித்து கேள்வி எழும் நிலை.

புழல் சிறையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: பாதுகாப்பு குறித்து கேள்வி எழும் நிலை.

சென்னை: புழல் மத்திய சிறையில் பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசாரணை கைதிகள் தங்கியிருந்த அறையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதான வில்லிவாக்கத்தை சேர்ந்த ரவுடி செல்வம் (32) மற்றும் அரும்பாக்கம் ரவுடி கணேஷ் (38) ஆகியோரின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் சிறை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிறைக்குள் கைதிகளை அனுமதிக்கும் முன், ஆடைகள் முழுவதும் அகற்றப்பட்டு கடுமையான சோதனை நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அத்தகைய பல அடுக்கு பாதுகாப்புகளை தாண்டியும் போதைப்பொருட்கள் உள்ளே வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறை ஊழியர்கள் அல்லது சிறை நிர்வாகத்துடன் தொடர்புடைய நபர்கள். உதவி இன்றி இதுபோன்ற சம்பவம் நிகழ்வது சாத்தியமில்லை என பழைய சிறைவாசிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook