ராமநாதபுரம், மார்ச் 16–
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் தலைமையிலும், தமுமுக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர் அவைத்தலைவர் சேசு மைக்கேல், மாவட்ட பிரதிநிதி சந்தானம், மாவட்ட பகுத்தறிவாளர் சங்க செயலாளர் பேரின்பம், ஏஐடியுசி மீனவர் சங்க தலைவர் இன்னாசிமுத்து, பாம்பன் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசிப், பாம்பன் கிளை பொருளாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஜவகர், ஒன்றிய துணை பொருளாளர் அழகர், தமுமுக மாவட்ட துணை செயலாளர் மைதீன் ராஜா, கிளை தலைவர் முஹம்மது இலியாஸ் உள்ளிட்ட சிபிஐ, சிபிஎம் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும், சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தங்கச்சிமடம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
— ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்
M.N. அன்வர் அலி.

