கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.

கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.

ராமநாதபுரம், மார்ச் 16–

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் ஏர்வாடி எஸ்.ஏ.பி.எம்.எச் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியை முகமது சாரா சமீமத் ஆலியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிரின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் முகமது சதக் பொறியியல் கல்லூரியின் கல்வி நிர்வாக தலைவர் முனைவர் திராவிட செல்வியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையொட்டி கல்லூரி மாணவிகளுக்காக ரங்கோலி, மெகந்தி, மணப்பெண் அலங்காரம், சிகை அலங்காரம், நெருப்பில்லாத சமையல், கழிவு பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் தயாரித்தல், ஊமை நாடகம், நடனம், பாட்டு போட்டி மற்றும் அலங்கார ஆடை அணிவிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அதிக புள்ளிகள் பெற்ற ராவியத்து ஜஹான் என்ற மாணவிக்கு “மிஸ் பினிக்ஸ்” விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியைகள் லோகேஸ்வரி, பரிமளா தேவி மற்றும் கமலவேணி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் யூசுப், செயலாளர் ஷர்மிளா, இயக்குனர்கள் ஹாமிது இப்ராஹிம் மற்றும் ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

— ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook