தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், மார்ச் 16–

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் தலைவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையிலும், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாபு லத்தீப் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதி வெறி ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பரவலை தடுக்க தவறியதாகவும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை அரசியல் காரணங்களால் தடுக்க முயற்சி செய்வதை கண்டித்தும், ஜனநாயக வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook