சென்னை: வட சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வசிக்கும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு தெய்வதிரு மனோகரா பூபதி அறக்கட்டளை சார்பில் இலவச உணவு மற்றும் இலவச கல்வி வழங்கும் சமூகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
“முதலில் தட்டில் நிரப்புவோம், பிறகு புத்தகத்தைத் திறப்போம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன், பசியால் கல்வி தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மறைந்த தெய்வதிரு மனோகரா பூபதியின் சமூக சேவை கனவை நினைவாக்கும் வகையில், அவருடைய இளைய மகன் ஹரிபிரபு இந்த மனிதநேய முயற்சியை முன்னின்று செயல்படுத்தி வருகிறார். சமூகத்தில் பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்குவதுடன், மாணவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்கப்படும் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசி மற்றும் கல்வியின்மை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இந்த சமூகப்பணியை கண்டு, ஏழை எளிய மக்களின் எண்ணங்களில் வாழும், ஹரிபிரபுவை மனதார பாராட்டி வருகின்றனர்.

