மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – இருவர் பிடிபட்டனர்!

மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – இருவர் பிடிபட்டனர்!

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் மிகப்பெரிய அதிரடி சம்பவமாக, சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

ரகசியத் தகவலின் அடிப்படையில் மாதவரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட DRI அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான வாகனத்தை சோதனையிட்டபோது பெருமளவிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுமார் 70 கிலோ எடையுள்ள ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.140 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரைப் பிடித்துள்ள அதிகாரிகள், போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாருக்குக் கடத்திச் செல்லப்பட்டது, இதன் பின்னணியில் செயல்படும் முக்கிய நபர்கள் யார், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னையில் இவ்வளவு பெரிய அளவில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook