பட்டா கத்தியுடன் இளைஞர் மிரட்டல்!

சென்னை பெரம்பூர் பகுதியில் ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் மோதியதை தட்டிக் கேட்ட முதியவரை பட்டா கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் குறித்து முதியவர் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த இளைஞர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அச்சமடைந்த முதியவர் உடனடியாக வீட்டிற்குள் சென்றார். ஆனால் அதன்பிறகும் இளைஞர் அங்கிருந்து செல்லாமல், தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

Read More

Facebook