திருச்சி கண்டோன்மெண்ட் கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது. கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் தில்ஷத் ஷா வழிகாட்டுதல் படி நிறுவன மனிதவள மேலாளர் தேவராஜ், கிளை மேலாளர் பிரசாத், சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் கனகராஜ், முதன்மை விற்பனையாளர் ஹரி, இளம் விற்பனையாளர் ஹேமா முன்னிலையில் மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை
Category: சமீபத்திய செய்திகள்
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் குடும்பத்தினர்!
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி மகனுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருகிறார். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் சட்டப்படிப்பு பயிலும் கீர்த்தனா விஜயகுமார் இது குறித்து பேசுகையில், இறுதிச் சடங்கில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கமாக உள்ளது,பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொடர்பான கருத்துகள் மாறுபடுகின்றன. சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள்சிலர் பெண்கள்
மன உளைச்சலால் ஐ.டி. பொறியாளர் உயிரிழப்பு
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: மன உளைச்சலால் ஐ.டி. பொறியாளர் உயிரிழப்பு சென்னை: சென்னை விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்து, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலாஜி தாக்கு (வயது 39). தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வந்த இவர், வேலை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது
வால்பாறை அருகே சிறுவனை புலி தாக்கி பரபரப்பு
வால்பாறை அருகே சிறுவனை புலி தாக்கி பரபரப்பு வால்பாறை அருகே வீரன்குடி மலைப்பகுதியில் நேற்று இரவு பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது. குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த ராகுல் என்ற 4 வயது சிறுவனை, புலி ஒன்று திடீரென தாக்கி, அவன் தலையை கடித்து இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. சிறுவன் அலறிய சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து கத்தினர். இதனால் புலி அச்சமடைந்து சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு
நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி – டெங்கு காய்ச்சல் காரணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால், இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ராதிகா தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும், மேலும் 5 நாட்கள்
தாயும் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவிகள்!
சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி பிரிவுக்கான நேர்முக கலந்தாய்வு சென்னை நேரில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான அமுதவல்லி கலந்து கொண்டார். அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடம் கிடைத்துள்ளது. அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாயிணி, நீட் தேர்வுக்காக பாடங்களைப் பயின்றபோது, அவற்றை தனது தாயிடம் பகிர்ந்து வந்துள்ளார். இதனால் ஊக்கமடைந்த
சிலிண்டர் விநியோக லாரிகள் வேலைநிறுத்தம்: தென் மாநிலங்களில் தட்டுப்பாடு அச்சம்
எரிவாயு சிலிண்டர் விநியோக லாரிகள் வேலைநிறுத்தம்: தென் மாநிலங்களில் தட்டுப்பாடு அச்சம் ஈரோடு: தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் இண்டேன் எரிவாயு நிரப்பும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாள்தோறும் சுமார் 4 லட்சம் எல்பிஜி சிலிண்டர்கள் லாரிகள் மூலம் வீடுகளுக்கு விநியோகமாகின்றன. இந்த நிலையில், உற்பத்தி திறனை பாதியாகக் குறைத்தது, மேலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் அபராதம்
இந்தியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை – சுனாமி எச்சரிக்கை மையம் உறுதி
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம் இந்தியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை – சுனாமி எச்சரிக்கை மையம் உறுதி மாஸ்கோ/சென்னை: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் அருகே இன்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷ்யா மற்றும் ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி அபாயம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய சுனாமி எச்சரிக்கை மையம், “இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கும், இந்தியப்
அப்துல் கலாம் – இந்தியாவின் கனவுக்கிழவன்: ஒரு நினைவஞ்சலி
26 ஜூலை – அப்துல் கலாமின் நினைவு தினம் இந்தியாவின் அறிவியல், கல்வி மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகமே அறிந்த தலைசிறந்த விஞ்ஞானியாக உயர்ந்தவர் கலாம். அவர் காட்டிய வாழ்வியல், பண்பாடு, நேர்மை மற்றும் சேவைபோக்கான கண்ணோட்டம் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. விஞ்ஞானி கலாம்: இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு
தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள்: பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, ஜூலை 26: தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தலைமை தேர்தல் அதிகாரி அளித்த விரிவான தகவலின்படி, ஆண் வாக்காளர்கள்: 3.11 கோடி பெண் வாக்காளர்கள்: 3.24 கோடி மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 9,120 பேர்இந்த புதிய வாக்காளர் பட்டியலில், மூன்றாம்

