சென்னை, செப்.5 – தமிழ் திரையுலகில் மறக்க முடியாத பங்களிப்பை செய்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) இன்று மூப்பினால் சென்னை பெரம்பூரில் காலமானார். பூவை செங்குட்டுவன், கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவிற்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி வழங்கியவர். அவரின் பாடல்கள் மக்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “தாயிற் சிறந்த கோவிலுமில்லை”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்”, “இறைவன் படைத்த உலகை” உள்ளிட்ட
Category: சமீபத்திய செய்திகள்
பிங்க்’ ஆட்டோக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, செப்.1 – தமிழக அரசின் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20 முதல் 45 வயதுக்குட்பட்ட, சென்னையை சேர்ந்த பெண்கள் இதில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்கார வேலர் மாளிகை, சென்னை–600 001 என்ற முகவரிக்கு, வரும் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
கண்ணூரில் அமீபா மூளைக்காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
கண்ணூர், செப்.1– கேரளாவில் அரிதான வகை நோயான அமீபா மூளைக்காய்ச்சல் பரவல் கவலைக்கிடமாக தொடர்கிறது. கண்ணூர் மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர், கடந்த மாதம் இந்நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், உடல்நலம் தேறியதால் கடந்த மாதம் 11-ம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால், ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் காய்ச்சல்,
விஷப்பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழப்பு
ஆவடி, செப்.1– ஆவடி அருகே விஷப்பூச்சி கடித்ததில் 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த கண்ணப்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த சங்கர் (47), தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சர்மிளா (19), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 29ம் தேதி காலை சர்மிளா
புதிதாக உருவாகும் குப்பை மேடு. வைத்தியநாதன் மேம்பாலம்.
சென்னை, செப்.1 – தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநகராட்சி ஊழியர்களே திட்டமிட்ட வகையில் குப்பைகளை அங்கு கொட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குப்பை மூட்டைகளால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாகவும், இதனை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு வாலாஜா பைபாஸ் சாலை அருகிலுள்ள தமிழ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில், வருவாய் துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணிபதுகாப்பு சட்டம், கருணை அடிப்படையிலான பணியிலக்கு 5% இலிருந்து 25% ஆக உயர்த்துதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜே.கே. விஜயசேகர் தலைமை வகிக்க, மாநில பொருளாளர் வி.தியாகராஜன்
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவியேற்றார்
சென்னை, ஆக.31 – தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி பதவிக்கு ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தன்னுடைய முழு திறனையும் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
தோழி மிரட்டியதால் மாணவி தற்கொலை
கடலூர், ஆக.31 – கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வசித்து வந்த 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அருகே உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்த அவர், அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவருத்தம் ஏற்பட்டதாக
கண்டக்டர்களிடம் சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை – எம்டிசி பரிசீலனை
சென்னை, ஆக.31 – சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் தற்போது சிங்கார சென்னை பயண அட்டைகள், குறிப்பிட்ட விற்பனை மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இனி பயணிகள் நேரடியாக பேருந்து கண்டக்டர்களிடமிருந்தே இவ்வட்டைகளை வாங்கும் வசதி ஏற்படுத்தும் வகையில் எம்டிசி பரிசீலித்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள மாதாந்திர பஸ் பயண அட்டைகள் தற்போது எம்டிசி
கொளத்தூரில் கல்லூரி கட்டும் நில விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
புதுடெல்லி, ஆக.30: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியிலிருந்து நடத்தப்பட்டு வரும் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, தற்போது கொளத்தூரில் இயங்கி வருகிறது. கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க, கொளத்தூர் சோமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் அரசாணை கடந்த ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ், “கோவில் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு குத்தகைக்கு

