திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார்.
Category: சமீபத்திய செய்திகள்
தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம். எம்.எல்.ஏ பங்கேற்பு.
அரக்கோணம் MRF தொழிற்சாலையில் அரக்கோணம் சுற்றவட்டாரித்தில் இருந்து வந்து பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் MRF தொழிற்சாலை வெளியே மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்…இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி BA BL.,MLA கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து MRF நிர்வாகத்திடம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444…
பிரபல தொழிலதிபர் ஆற்காடு ஏ.வி.சாரதி, வள்ளி மலையில் தலைவராக பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் கந்தனை மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆற்காடு மூகாம்பிகை டிரேடர்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான திமுக மாவட்ட பொருளாளர் A.V.சாரதி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக நேற்று கோவில் மணி மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் உறுதி எடுத்துக் கொண்டு பதவி ஏற்று கொண்டார்.உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்
T.H.ROAD நடைபாதை கடைகள் அகற்றம். 500 ரூபாய் அபராதம்.
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள நடைபாதை கடைகள் அனைத்தையும் அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அறிக்கை ஒன்றை நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, உதவி பொறியாளர் பாபு தலைமையில் 10 துக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நடைபாதை கடைகள், நடைபாதையில்
ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம். வள்ளிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்கும் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் A.V.சாரதி அவருக்கு ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 9150223444
T.H.ரோடு நடைபாதை வியாபாரிகளுக்கு.
பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு. சென்னை வண்ணாரப்பேட்டை. T.H.ROAD பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வரும் 17.03.2025 அன்று மாநகராட்சி நடைபாதையில் மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தவிர்க்க வியாபாரிகள் தாங்களாகவே நடைபாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்துமாறு
தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி,விவசாயம் செய்ய வழி பாதை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை, தளவாய் பட்டடை கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் முற்றிய நெற்கதிர்கள் அறுவடை செய்ய வழியின்றி டிராக்டர், அறுவடை இயந்திர வாகனங்கள் சென்று வர வழி பாதை கேட்டு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர் நாட்டாண்மை, கிளைத்தலைவர் ஆ. மணி தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சி, தளவாய்பட்டடை கிராமம் சர்வே எண் 1360-ல் ஏறி வரத்து
அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் மாநில அளவிலான அஞ்சல் தலை கண்காட்சியில் வெற்றி பெற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு விழாவினை திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். விழாவில், தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தென்னிந்திய தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்துடன் (SIPA) இணைந்து சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடத்திய
10 ஆண்டு கோரிக்கை. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு செங்குந்தர் புதிய ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பத்தாண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் கோரிக்கையை ஏற்று பொது நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் மீது குடியிருப்பு வாசிகள் படிக்கட்டுகள் சாய்வு தளம் அமைத்து ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.

