அரசு அலுவலர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் – பழைய ஆணையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை அலுவலகங்களில் பொதுமக்கள் நம்பிக்கை உயர – வழக்கறிஞர் வி.ரமேஷ் குமார் வலியுறுத்தல் சென்னை, நவம்பர் 7: அரசு அலுவலர்கள் பணிநேரங்களில் பெயர் மற்றும் பதவி குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை அணிவது கட்டாயம் என, பழைய அரசாணையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்
Category: சமீபத்திய செய்திகள்
வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி வீடு வீடாக — மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள் வாலாஜாபேட்டை மற்றும் அம்மூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் படிவங்களை வழங்கி ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு திருத்தப்பணி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்த்தல், உயிரிழந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் பெயர் நீக்கம், இரட்டைப்
நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வேலூர்: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் (Stroke) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் “Walkathon 2025” என்ற பெயரில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையேற்றார். வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலையில், வேலூர் எம்.எல்.ஏ. பி. கார்த்திகேயன் கொடியசைத்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ
கல்லூரி மாணவி உட்பட 4 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின
சென்னை, அக். 31: எண்ணூர் கடற்கரையில் ஒரே நேரத்தில் நால்வரின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் உள்ளூர் மக்கள் கடற்கரையில் நான்கு பெண்களின் உடல்கள் கரையொதுங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், மரணமடைந்தவர்களில் ஒருவர் வயது 17 ஆன கல்லூரி மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் நண்பர்களுடன் எண்ணூர் கடற்பகுதிக்கு வந்து குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை, அக். 30 – ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மாம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இராஜா (வயது 36) மற்றும் நெமிலி வட்டம் தென்மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தன் (வயது 22) ஆகியோர் தங்களுக்குத் தேவையான சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனு அளித்தனர். அந்த மனுவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 2000 கனஅடியில் இருந்து 4000 கனஅடியாக நீர்வெளேற்றம் உயர்வு
பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு மோன்தா புயல் காரணமாக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 2000 கனஅடியில் இருந்து 4000 கனஅடியாக நீர்வெளேற்றம் உயர்வு திருவள்ளூர், அக். 27: மோன்தா புயலால் உருவாகியுள்ள கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்குத் திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில்,
தமிழ்மொழி, இலக்கியம் குறித்த விழிப்புணர்வு உரைகள்
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜா நூல் வெளியீடு – தமிழ்மொழி, இலக்கியம் குறித்த விழிப்புணர்வு உரைகள் திருச்சி, அக். 27: இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் சண் தவராஜாவின் “சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்” நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் மணவைத் தமிழ் மன்ற செயலாளர்,
தமிழர் பெருமையை வெளிக்கொணரும் கல்வெட்டுச் சான்றுகள்
சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு! புதுக்கோட்டையில் வரலாற்று மரபு பயணம் – தமிழர் பெருமையை வெளிக்கொணரும் கல்வெட்டுச் சான்றுகள் புதுக்கோட்டை, அக். 27: திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலைப்பகுதியில் அமைந்துள்ள சமணர் படுக்கை மற்றும் தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தில் குழுத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன்,
தலைமைச் செயலாளர். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை 2025–ம் ஆண்டிற்கான மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேலும் அனைத்துத் துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்
நீரஜ் சோப்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
புது டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது புதிய கௌரவ பொறுப்பை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய ராணுவத்தின் பிராந்திய பிரிவில் “கௌரவ லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருமையைப் பெற்றதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நீரஜ் சோப்ராவை வாழ்த்தி, “நீரஜ் சோப்ரா விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார்” என்று

