ஆலந்தூர், ஆக.31 – சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் மத்திய குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த சந்திரமோகன் (46) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரமோகனுக்கு மனைவி ஜெனிபர் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த வாரம் மனைவி, மகள்களுடன் சொந்த ஊரான கேரளா சென்றிருந்தனர். இதையடுத்து, முன்னொரு நாள் இரவு ஜெனிபர் கணவருக்கு பலமுறை தொலைபேசி செய்தும் பதில் வராததால்
Category: குற்றம்
பெரம்பூரில் என்ஜினீயரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
சென்னை, ஆக.31– பெரம்பூர் வடிவேல் தெருவில், சென்னை மாநகராட்சியின் சார்பில் தனியார் நிறுவனம் மூலம் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அண்ணாநகரை சேர்ந்த ராமன் (26) எனும் இளைஞர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த இரவு, கட்டுமானப் பொருட்களை காக்கும் போது மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த இரும்புக் கம்பிகளை திருட முயன்றுள்ளனர். அதை தடுத்த ராமனை, கத்தி காட்டி மிரட்டி, அவரிடம்
மருத்துவர் 7 பெண் நோயாளிகளை மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வழக்கு: 24 ஆண்டு சிறை தண்டனை
வாஷிங்டன், ஆக.31– அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஜி.ஆலன் செங் மீது 7 பெண் நோயாளிகளை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஒரு பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்த ஆலன், சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. சம்பவம் குறித்து அந்த பெண் தனது வீட்டு கண்காணிப்பு கேமரா
3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
சென்னை, ஆக.30– சென்னை ராயபுரம் பகுதியில், கட்டிட தொழிலாளி ஒருவர் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை சோமுசெட்டி 1-வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (39) கட்டிட தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திய நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தின் 3-வது மாடி மொட்டைமாடியில் தனியாக தூங்கச் சென்றார். அப்போது தவறி கீழே விழுந்த
ஓட்டேரியில் உறவினரின் வாகனத்தை எரித்த வாலிபர் கைது
சென்னை, ஆக.30– சென்னை ஓட்டேரி பகுதியில், வீட்டை எழுதி தருமாறு உறவினரிடம் கோரிய வாலிபர், தகராறு காரணமாக அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் வசந்தகுமார் (45), கார் டிரைவர். இவரது வீட்டின் மேல் தளத்தில் உறவினரான விக்னேஷ் (25) வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, மாடி பகுதியில் உள்ள வீட்டை தமக்கே எழுதி தருமாறு விக்னேஷ், வசந்தகுமாரிடம் கோரியுள்ளார். இதனை
இறுதி அறிக்கையை கண்காணிக்க தவறியதாக குற்றச்சாட்டு: 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை.
சென்னை, ஆகஸ்ட் 30: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறிய விவகாரம் தொடர்பாக, 5 போலீஸ் சூப்பிரண்டுகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தாலும், அதற்கான இறுதி அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது விசாரணையின்
காவல்துறையினர் கடைகளை மூடச் சொல்வதாக.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சென்னை: தமிழக அரசின் உத்தரவின்படி 24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இரவு நேரங்களில் கடைகளை மூடுமாறு மிரட்டுவதாக தேசிய ஓட்டல்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை மீறி கடைகள் மூடப்படக் கூடாது என்று தெளிவுபடுத்தியது. மேலும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரசாணை தொடர்பான தகவலை உடனடியாக அறிவிக்க சென்னை
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு
சென்னை கண்ணகி நகர்: மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு சென்னை கண்ணகி நகர் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று இன்று அதிகாலை நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி (40) அவர்கள், காலை வேலைக்கு செல்லும் போது மழை நீரில் மூழ்கியிருந்த மின்கேபிள் மீது தவறுதலாக கால்வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விபத்து அதிகாலை 4.50 மணியளவில் ஏற்பட்டது. உயிரிழந்தவருக்கு 12 வயது பெண் குழந்தையும்,
வழக்கறிஞர் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு : சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல் சென்னை: நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், Naam Tamilar Katchi ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீமான் வெளியிட்ட பேச்சு தொடர்பாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் புகார் அளித்திருந்தார். எனினும், அந்த புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் சென்னை
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை உயர்வு – 2018ஐ விட 2024ல் 1.50 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு சென்னை: மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பொது சுகாதாரத் துறையின் பிறப்பு–இறப்பு பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2018ஆம் ஆண்டு மாநிலத்தில் 5,45,255 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 2024ஆம் ஆண்டில் இது 6,95,680 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 2018ஐ விட

