சேலத்தில் போலீசார் உதவியுடன் ரேஷன் அரிசி கடத்தல் – லஞ்ச வலையில் சிக்கிய 4 போலீசார் கைது! சேலம் மாவட்டத்தில் அரசு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் போலீசாரே லஞ்சம் வாங்கியதால் அதிர்ச்சி பரவியுள்ளது. ஆத்தூர் அருகே விவசாயியாக உள்ள சக்திவேல், இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளிவந்த சக்திவேல், மீண்டும் அதே
Category: குற்றம்
தஷ்வந்த் மரண தண்டனை ரத்து – உடனடி விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
சென்னை: போரூர் அருகே 6 வயது சிறுமி ஹாசினியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று முகலிவாக்கம் பகுதியில் வசித்த ஹாசினி காணாமல் போனார். மூன்று நாட்களுக்கு பிறகு, போலீசார் அந்த சிறுமியின் எரிந்த உடலை ஒரு பயணப் பையில் அடைத்து
ஸ்டான்லி மருத்துவமனையில் குடிநீர் இல்லையா? – நோயாளிகளின் குரல்!
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவ உதவி பெற வருகிறார்கள். அவர்களில் பலர் உள்நோயாளிகளாகவும், பலர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மருத்துவமனையில் கூட, நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் குடிநீர் வசதி இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். “தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் யாரும் பார்த்துக் கொள்வதில்லை! தண்ணீர் இல்லை என்றால் யாரை கேட்கலாம்?” — என்று நோயாளிகள் கேள்வி எழுப்புகின்றனர். சமூக
உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் தாக்குதல் – சமூகத்தில் அதிர்ச்சி!
சென்னை உயர் நீதிமன்றம் பார் கவுன்சிலிங் அருகாமையில் வழக்கறிஞர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதேபோன்று, கடந்த மாதம் தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் அருகாமையிலும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி இருந்தது. தொடர்ந்து இவ்வாறு பொது இடங்களில், அதுவும் காவல்துறை மற்றும் நீதித்துறை வளாகங்களின் அருகே கூட பாதுகாப்பு இல்லை என்பதைக்
கலங்கிய குடிநீர் — பெண்கள் ஆவேச முற்றுகை!
பானாவரத்தில் கலங்கிய குடிநீர் — பெண்கள் ஆவேச முற்றுகை! ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம்: பானாவரம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கலங்கலாகவும் சகதியுடனும் வழங்கப்பட்டு வந்ததால், மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. யாதவா தெரு, பஜார் தெரு, கம்மார் தெரு, கோகுல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது மக்களின் கோபத்தை தூண்டியது. இதனால்
தப்பி ஓடிய நபருக்கு எலும்பு முறிவு. காவல்துறை விளக்கம்.
செங்கல்பட்டு: நந்திவரம் கூடுவாஞ்சேரியில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மின்வாரிய ஊழியரை அருவாளால் வெட்டிய ஏழு பேர் கொண்ட ரவுடிக் கும்பலை போலீசார் பத்து மணி நேரத்திலேயே பிடித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, அம்பேத்கார் நகரில் பைக் ரேஸ் நடந்ததை மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் தட்டி கேட்டிருந்தார். இதனை பழிவாங்கும் நோக்கில் குற்றவாளிகள் தாக்குதல் நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில், போலீசார் ஏழு பேரையும் கைது
சனாதனத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு – தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞர் இடைநீக்கம்
சனாதனத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு – தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞர் இடைநீக்கம் தில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சனாதனத்தை அவமதித்தார் என குற்றம்சாட்டி, அவரை செருப்பால் தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கு முரணான நடத்தை மற்றும் வழக்கறிஞர்களுக்கான நெறிமுறைகளை மீறியதற்காக எடுக்கப்பட்டதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காஜூராகோ கோவிலில் விஷ்ணு சிலையின்
சிறைகளில் “செல்போன் கலாச்சாரம்” — பாதுகாப்புக்கு சவால்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதி ஒருவர் ஆப்பிள் மாலை அணிந்தபடி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. சீனிவாஸ் எனப்படும் “குப்பாச்சி சீனா” என்ற கைதி சிறையில் மொபைல் போனில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை பதிவு செய்து வெளியிட்டிருப்பது, சிறை பாதுகாப்பு முறைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. சிறைகளில் மொபைல் போன்கள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கைதிகள் இதை எளிதில் பயன்படுத்துவது எவ்வாறு
பேட்டரி தீர்ந்ததால் திருட்டை பாதியில் கைவிட்ட திருடன்!
சென்னையை அடுத்த திருநின்றவூரில் நள்ளிரவில் நடைபெற்ற சுவாரஸ்யமான திருட்டு முயற்சி தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு உள்ள மகாலட்சுமி ஜுவல்லரி என்ற நகைக்கடையின் ஷட்டரை, அடையாளம் தெரியாத திருடன் ஒருவர் கட்டிங் இயந்திரம் கொண்டு அறுத்துள்ளார். ஒரு மனிதன் நுழையக்கூடிய அளவுக்கு ஷட்டர் வெட்டப்பட்ட நிலையில், அதன் பின்னால் இருந்த கிரில் கேட்யையும் அறுத்து உள்ளே நுழைய முயன்றுள்ளார். அதன் பின்னர் உள்ள கேஷ் கவுண்டர் மற்றும் நகை டிஸ்ப்ளே தடுப்பையும்
துப்புரவுத் தொழிலாளி விஷவாயுவால் பலி – நயினார் நாகேந்திரன் கண்டனம்
கொளத்தூரில் துப்புரவுத் தொழிலாளி விஷவாயுவால் பலி – நயினார் நாகேந்திரன் கண்டனம் சென்னை கொளத்தூரில் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளி, விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்: “கார் ரேஸ்களுக்கும் விளம்பர நாடகங்களுக்கும் கோடி கோடியாக செலவழிக்கும் திமுக அரசுக்கு, ஏழைத் துப்புரவுத் தொழிலாளியின் உயிரைப் பாதுகாக்க சில ஆயிரம்

