தூய்மைப் பணிகள் தீவிரம் – வீடுகள், கடைகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்!

தூய்மைப் பணிகள் தீவிரம் – வீடுகள், கடைகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்ட நான்கு வகைகளாகத் தரம் பிரித்து நகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்கள், தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

 

இதனைத் தொடர்ந்து, சோளிங்கர் நகராட்சி அர்ஜுன ரெட்டி தெருவில் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்கும் குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில், “குப்பைகளைப் பிரித்து வழங்கும் வீடு – பெருமைக்குரிய வீடு” என்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வீடுகளின் முன்புறம் ஒட்டப்பட்டன.

 

வீடுகளிலேயே குப்பைகளைத் தரம் பிரிக்கும் பழக்கத்தைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதுடன், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்படுத்தவும், மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கவும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

எனவே, நகரின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தூய்மையான சோளிங்கரை உருவாக்கவும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட செய்தியாளர்: ஆர்.ஜே. சுரேஷ்குமார்

தொடர்புக்கு: 9150223444

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook