மின்கசிவால் உயிர் தப்பிய துப்புரவுத் தொழிலாளி! உடனடி நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் யூ. கணேசன் – பொதுமக்கள் பாராட்டு!

மின்கசிவால் உயிர் தப்பிய துப்புரவுத் தொழிலாளி! உடனடி நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் யூ. கணேசன் – பொதுமக்கள் பாராட்டு!

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதி, 38-வது வட்டத்திற்குட்பட்ட வினோபா நகர் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவால் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த தகவல் அறிந்த 38-வது வார்டு கவுன்சிலரும், மண்டலக் குழுத் தலைவருமான யூ. கணேசன் உடனடியாகத் துரித நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, மின்கசிவு பிரச்சினை சரிசெய்யப்பட்டது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து, அசம்பாவிதம் ஏற்படாமல் பிரச்சினையைச் சீர்செய்த கவுன்சிலர் யூ. கணேசனின் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.

மின்கசிவு போன்ற ஆபத்தான பிரச்சினைகள் ஏற்படும்போது உடனடியாக நடவடிக்கை எடுப்பது உயிரிழப்புகளைத் தடுக்க உதவும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook