குற்ற வழக்குகளில் காரணங்களை முறையாக குறிப்பிடாமல் கைது செய்வதா? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

குற்ற வழக்குகளில் காரணங்களை முறையாக குறிப்பிடாமல் கைது செய்வதா? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

சென்னை: குற்ற வழக்குகளில் கைதுக்கான காரணங்களை முறையாக குறிப்பிடாமல், இயந்திரத்தனமான முறையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கைது நடவடிக்கைகளின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு தெளிவான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி பிறப்பிக்க, தமிழக காவல்துறை டிஜிபிக்கு (DGP) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டின் தன்மை, கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளிட்ட அம்சங்களை முறையாக பரிசீலித்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கைது நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையும், சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதும் அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook