சென்னை: பணியின் போது போக்குவரத்து காவலர்கள் மொபைல் போனில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இதுதொடர்பாக பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதில் கவனம் செலுத்தி வருவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை காவல்துறை தீவிரமாகக் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

