சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் என்பவரை காரில் கடத்தி, ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பாரிமுனையில் பாத்திரக் கடை நடத்தி வரும் கமலேஷ், நேற்று காலை நேரு பூங்கா பகுதியில் கடத்தப்பட்டார். பின்னர் ரூ.50 லட்சம் கேட்ட கும்பல், இறுதியில் ரூ.30 லட்சம் தர வேண்டும் என கூறி, 5 சவரன் நகையையும் பறித்துக் கொண்டு பணத்தை எடுத்து வருமாறு அவரை விடுவித்தது.
கும்பல் கூறிய இடத்திற்கு கமலேஷ் பணத்துடன் சென்றபோது, மறைந்திருந்த போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

