சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை சதிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ரவுடி லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவருடன் தொடர்புடைய மேலும் 3 பேரும் சதியில் தொடர்புடையவர்கள் என தெரியவந்த நிலையில், அவர்கள் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

