வீடு புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது.

வீடு புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது.

சென்னை நொளம்பூர் பகுதியில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது. 8 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சஞ்சய் (25) என்ற இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இந்த தாக்குதலில் சஞ்சயின் தந்தை முருகதாஸ் மற்றும் சகோதரர் சரத் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் ரூபேஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook