சென்னை வியாசர்பாடி ஏரிக்கரை ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் மது அருந்த பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் தாய் மாமனை தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், அப்பகுதியில் வசித்து வந்த முருகன் (50) என்பவரிடம் அவரது உறவினரான பவித்ரன் (30) மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பவித்ரன் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பவித்ரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

