தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் அக்னிமுத்து, குடும்பப் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி, குறுஞ்செய்திகள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனுவில் இருந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி அந்த பெண்ணை தொடர்புகொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், தலைமை காவலர் அக்னிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட காவலர் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

