அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ்க்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.10,000 ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்றும், ஒரு வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

