அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, கூட்டமைப்பின் தலைவர் ஹமீது இப்ராஹிம் மற்றும் பி.ஆர்.எல். சதக் அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்,

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்,

முன்னாள் அமைச்சர் மற்றும் மாநில இலக்கிய அணி தலைவர் அன்வர் ராஜா,

கீழக்கரை சி.எஸ்.ஐ. சர்ச் கிறிஸ்துவ பாதிரியார் டேனியல் சுப்பிரமணி

உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் நிர்வாகிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்து மற்றும் கிறிஸ்தவ மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

– ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்

M.N. அன்வர் அலி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook