70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் சிறப்பு விழா.

70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் சிறப்பு விழா.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, சிவகங்கை இணை ஆணையர் மண்டலம் மற்றும் ராமநாதபுரம் உதவி ஆணையர் பிரிவு சார்பில், சட்டமன்ற அறிவிப்பு 2025–2026 (அறிவிப்பு எண்: 28) அடிப்படையில் 70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் நடத்தப்பட்டது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷிநேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி, கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது.

திருவாடானை ஆய்வாளர் சண்முகசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து ராமநாதபுரம் ஆயிர வைசிய மகா சபை சங்கத் தலைவர் ஜெயராமன் எம்.சி. மற்றும் ராமேஸ்வரம் முன்னாள் மேலாளர் மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் 70 வயதை கடந்த 114 மூத்த இணைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூடுதல் ஆட்சியர் பட்டு சேலை, பட்டு வேஷ்டி மற்றும் மலர் மாலைகள் வழங்கி சிறப்பு செய்தார். மேலும், அட்சதை தூவி மேலதாளம் முழங்க அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி ஆணையர் லட்சுமி மாலா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பு ராயலு, ஆயிர வைசிய சங்க செயலாளர் ஜெயக்குமார், தர்மதாவலா கோவில் அறங்காவலர் சரவணன் உள்ளிட்ட அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி இராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் நிதியில் இருந்து நடத்தப்பட்டது.

இறுதியாக ராமநாதபுரம் ஆய்வாளர் மணிவண்ணன் நன்றியுரை வழங்கினார்.

— ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்

M.N. அன்வர் அலி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook