பெங்களூருவில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! பெங்களூரு, ஆகஸ்ட் – தவணாகெரே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, அந்தச் சிறுமியை தெருநாய் கடித்தது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற்றும், நிலைமையில் முன்னேற்றம்
Category: ட்ரெண்டிங்
சுதந்திர தின விழாவில் சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!
திருச்சி கண்டோன்மெண்ட் கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது. கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் தில்ஷத் ஷா வழிகாட்டுதல் படி நிறுவன மனிதவள மேலாளர் தேவராஜ், கிளை மேலாளர் பிரசாத், சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் கனகராஜ், முதன்மை விற்பனையாளர் ஹரி, இளம் விற்பனையாளர் ஹேமா முன்னிலையில் மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை
ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு!
திருவொற்றியூரில் ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு! சென்னை: திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில், கத்தி வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த மூன்று இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பிய மீனவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரை துறைமுகம் பகுதியில், பர்மா வசந்த் (33), பிரதீப் (20), லத்தீஷ் (20) ஆகியோர் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்தனர். இச்சம்பவம் இடத்திற்கு
சண்முகவேல் வெட்டிக்கொலை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் அஞ்சலி –
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் அஞ்சலி – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை உறுதி திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57), நேற்று இரவு தந்தை மற்றும் இரு மகன்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் எப்படி நடந்தது? குடிபோதையில்
நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மீரா மிதுனை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில்
பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்
சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த குணச்சித்திர நடிகர் மதன் பாப் (இயற்பெயர்: கிருஷ்ணமூர்த்தி) காலமானார். இவர் 71 வயதாகும். 1953 அக்டோபர் 19 அன்று பிறந்த மதன் பாப், இசையமைப்பாளராகத் தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நடிகராக மாறி நகைச்சுவை, குணச்சித்திரம், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தின் மூலம்
23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி தகவல்: 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம் போபால்: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளன. இந்த தகவல் வெளியான நிலையில், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. மகளிர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாயமான
தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம் – தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழக மக்களின் உடல்நலனைக் காக்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற வேண்டியும் முதல்வர்
ரயிலில் இருந்து விழுந்து பெண் பலி
வாணியம்பாடி: கேரளாவில் இருந்து சென்னைக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்த ரோகிணி ( வயது 28 ) என்ற இளம் பெண் துரதிஷ்டவசமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னைக்கு வந்தடைந்து கொண்டிருந்தபோது, வாணியம்பாடி அருகே ரயில் நகரும் நிலையில் திடீரென ஏற்பட்ட தவறால் அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார்

