சென்னை, செப்.1 – தமிழக அரசின் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20 முதல் 45 வயதுக்குட்பட்ட, சென்னையை சேர்ந்த பெண்கள் இதில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்கார வேலர் மாளிகை, சென்னை–600 001 என்ற முகவரிக்கு, வரும் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
Category: ட்ரெண்டிங்
டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டி.ஜி.பி. பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தகுதியான அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சிக்கு பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழக அரசு வெங்கட்ராமனை சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமித்திருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி
பரங்கிமலையில் போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை
ஆலந்தூர், ஆக.31 – சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் மத்திய குற்றப்பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்த சந்திரமோகன் (46) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரமோகனுக்கு மனைவி ஜெனிபர் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த வாரம் மனைவி, மகள்களுடன் சொந்த ஊரான கேரளா சென்றிருந்தனர். இதையடுத்து, முன்னொரு நாள் இரவு ஜெனிபர் கணவருக்கு பலமுறை தொலைபேசி செய்தும் பதில் வராததால்
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவியேற்றார்
சென்னை, ஆக.31 – தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி பதவிக்கு ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தன்னுடைய முழு திறனையும் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
உடல் நலம் காக்கும் யோகா தியான பயிற்சி!
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை வெல்னஸ் கிளப், ஸ்கில் செட் அகாடமி சார்பில் உடல் நலம் காக்கும் யோகா , தியான பயிற்சி வகுப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி இணை முதல்வர் முனைவர் குமார் தலைமை வகித்தார். முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுவியல் துறை தலைவர் முனைவர் மகேஸ்வரி துவக்க உரையாற்றினார். முனைவர் ஜான் பிரபாகரன், ரஜீஷ், லட்சுமி பிரியா,
பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமன் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் பாளையக்காரர்கள்
ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா!
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் தங்கம், வெள்ளி நாணயம்பரிசு! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான நடத்திய ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் நடைபெற்றது. டிசைன் ஓவிய பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார். முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார். திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர்
தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி!
பெங்களூருவில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! பெங்களூரு, ஆகஸ்ட் – தவணாகெரே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, அந்தச் சிறுமியை தெருநாய் கடித்தது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற்றும், நிலைமையில் முன்னேற்றம்
சுதந்திர தின விழாவில் சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!
திருச்சி கண்டோன்மெண்ட் கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது. கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் தில்ஷத் ஷா வழிகாட்டுதல் படி நிறுவன மனிதவள மேலாளர் தேவராஜ், கிளை மேலாளர் பிரசாத், சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் கனகராஜ், முதன்மை விற்பனையாளர் ஹரி, இளம் விற்பனையாளர் ஹேமா முன்னிலையில் மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை
ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு!
திருவொற்றியூரில் ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு! சென்னை: திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில், கத்தி வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த மூன்று இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பிய மீனவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரை துறைமுகம் பகுதியில், பர்மா வசந்த் (33), பிரதீப் (20), லத்தீஷ் (20) ஆகியோர் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்தனர். இச்சம்பவம் இடத்திற்கு

